Skip to main content

“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா?”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி’. இதில் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி செம வைரலானது. இந்த வார வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் இந்த படத்திற்காக நமக்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும், படம் குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. 
 

mohan g

 

 

அப்போது அவரிடம் உங்களை பொறுத்தவரை நாடக காதல் என்றால் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “லவ் என்பது திடீரென வரும் பிரதர். அது எப்படி, எங்க வேண்டுமானாலும் தோன்றும் அதற்கு என்று தனி ஃபார்முலா கிடையாது. எப்படி வேண்டுமானாலும் லவ் வரலாம், அதெல்லாம் இல்லாமல் இந்த சமூக பெண், இந்த பணக்கார வீட்டு பெண், இந்த பெண்ணை திருமணம் முடித்தால் செட்டில் ஆகிவிடலாம், பெண்ணின் அப்பாவை மிரட்டி காசு பார்த்துவிடலாம், பெண்ணின் அப்பா பிசினஸில் பெரிய ஆள் அதை கைப்பற்றிவிடலாம் என்று ஒரு பையனை தயார் செய்து லவ் பண்ண வைப்பதைதான் நாடகக்காதல். அதாவது பிளான் பண்ணி ஒரு பெண்ணை ஏமாற்றி காதல் செய்வது நாடகக் காதல். 

நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒரு பையன் மேடையில், ‘இந்த வீட்டு பெண்ணைதான் காதலிப்போம், இந்த ஜாதி பெண்ணை கட்டிப்பிடிப்போம், இந்த ஜாதி பெண்ணைதான் திருமணம் செய்வோம்’ என்று பேசியிருப்பார். அது எந்த மாதிரியான காதல், அந்த காதலுக்கு பெயர் என்ன சொல்வீர்கள். அதுவும் புனிதமான காதலா? உங்கள் லிஸ்ட்டில் அதுவும் சேர்ந்துவிடுமா?

அந்த பையன் அப்படி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் எல்லாரும் பார்த்து எதிர்தார்கள்தானே? அப்படி அந்த பையன் புத்தியில் விதையை விதைப்பவர்கள் யாரு என்பதைதான் நாடகக்காதல் என்று நான் டெர்ம் செய்து கார்னர் பண்ணுவது” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்