![Don Director Cibi](http://image.nakkheeran.in/cdn/farfuture/V9lhvqVfRxGyXSTO-lL3vFAkMewmQSc9366AvdCyahU/1651663129/sites/default/files/inline-images/209_3.jpg)
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் டான் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"டான் படத்தின் கதையை 2014ஆம் ஆண்டிலேயே எழுதினேன். இந்தக் கதையைத்தான் முதல் படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்ததால் நிறைய மாற்றங்கள் செய்து கதையின் இறுதிவடிவத்தை உருவாக்கினேன். சிவகார்த்திகேயன் சாருக்கு கதை பிடித்திருந்ததும் படத்தின் வேலைகளைத் தொடங்கினோம். ஆஃப் ஸ்க்ரீனில் சிவகார்த்திகேயன் எப்படி இருப்பாரோ அதே மாதிரியான கேரக்டர்தான் அவருக்கு படத்திலும். அதனால் ரொம்பவம் ஈஸியாக படத்தில் நடித்தார். என்னுடைய ரியல் லைஃப்ல இருந்தும் சில சம்பவங்களை எடுத்து கதையில் வைத்திருக்கிறேன். எல்லோரும் ஈஸியா கனெக்ட் பண்ணிக்கிற மாதிரியான படமாக டான் இருக்கும். இந்தப் படம் காலேஜ் பற்றிய படம் என்பது மாதிரியான தோற்றம் எல்லோரிடத்திலும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் படத்தை காலேஜ் பசங்க எவ்வளவு என்ஜாய் பண்ணுவாங்களோ, அந்த அளவிற்கு பேமிலி ஆடியன்ஸும் என்ஜாய் பண்ணுவதற்கான விஷயங்களும் உள்ளது.
சிவகார்த்திகேயனின் நடிப்பு பெரிதும் கவனிக்கப்படும். பள்ளிக்கூடம் சம்மந்தப்பட்ட ஒரு காட்சியில் பிரியங்கா மோகன் ரொம்பவும் சிறப்பாக நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, பாலா, ராதாரவி, சிங்கம் புலி, காளிவெங்கட் என பெரிய பட்டாளமே படத்தில் உள்ளது. அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டான், படம் பார்ப்பவர்களுக்கு எந்தவிதத்திலும் ஏமாற்றத்தை தராது. வழக்கமான ஹீரோ, வில்லன்களுக்கு இடையேயான கதையாக இல்லாமல் ரொம்பவும் சிம்பிளான கதை. நம் வாழ்க்கையில் சந்தித்த நபர்களையும் நம் வாழ்க்கையையும் திரும்ப பார்க்க கூடிய படமாக இப்படம் இருக்கும். நல்ல படம் பார்த்த திருப்தியோடு வெளியே வரலாம் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்" என்றார்.