![Disha Patani is heroine for suriya 42 directing by siruthai siva](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rtb6lLfPUIMnpFFnESSLH1FF6yMMTfx31eRjhT6sXYs/1661513439/sites/default/files/inline-images/171_11.jpg)
இயக்குநர் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனிடையே சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 42' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
ஏற்கனவே 'சூர்யா 42' படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் பூஜை விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி கதாநாயகியாக திஷா பதானியும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் மூலம் திஷா பதானி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.