![rk suresh](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wwl7106MAjviuyBA2_H6Qr5vjlMtQX18-2EE_ksuQl8/1613808897/sites/default/files/inline-images/97_7.jpg)
சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வேட்டை நாய்'. ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் கதிரேசன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நாயகன் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில், ‘சின்ன கவுண்டர்’, ‘எஜமான்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், "ஆர்.கே.சுரேஷ் இன்னொரு ரஜினிகாந்த் போல வரப்போகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினியை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானத்திடம், ‘பைரவி’ படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி வந்தால் நான் அவரை வைத்து படம் இயக்கத் தயாராக இருக்கிறேன். ரஜினி போல பெரிய ஹீரோவாகி விடுவார் என்பது நிச்சயம். படத்தின் கதாநாயகி சுபிக்சா அழகாக இருக்கிறார். சென்னையிலேயே இப்படி ஒரு அன்னக்கிளியை வைத்துக்கொண்டு வெளியூர்களில் ஏன் அலைய வேண்டும்?” எனக் கூறினார்.