Skip to main content

எழுத்தாளர் பாலகுமாரனை மேற்கோள்காட்டிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Director Rogin Venkatesan quoting writer Balakumaran

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில்,  நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகை  மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

 

இயக்குநர் ரோகின் வெங்கடேசன் பேசியதாவது, "இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த லைகாவிற்கு நன்றி. ஆசைப்பட்ட வாழ்க்கை ஆசைப்பட்ட பொருள் ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காம போறதுதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம். பாலகுமாரன் சார் வார்த்தை, எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். இது என்னோட இரண்டாவது படமா வந்திருக்க வேண்டியது. சுரேந்திரன் சார் நிறையக் காதல் கதைகளை எழுதியிருக்கிறார். இந்தக் கதை ஒரு அற்புதம். அவரோடு நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என்னோட எப்போதும் கூட நின்றிருக்கார். இது வேற ஒரு புரொடக்‌ஷனுக்கு பண்ண வேண்டியது. அந்த தயாரிப்பாளர் சுதன் தான் ஐஸ்வர்யா கூட கனக்ட் பண்ணிவிட்டார். அவர் வேறு படங்கள் செய்து கொண்டிருந்த போதும் இந்தப் படம் பத்தி அவ்வப்போது பேசிக்கொண்டே இருப்பார்.

 

சுதன் இந்தப் படம் செய்யவில்லை என்றபோது தான் லைகாவிடம் போனோம். பல அடுக்குகள் தாண்டி, இந்தப் படம் ஓகே ஆனது. ஹீரோ எனும்போது ஜெய் ஞாபகத்திற்கு வந்தார். ஏன் ஜெய் என்றால், பார்ப்பவர்களுக்குக் கதையில் இந்தாள் இதை செய்திருப்பான் எனத் தோன்ற வேண்டும். அது அவர் முகத்தைப் பார்த்தால் மட்டுமே இருக்கும். ஷூட்டிங் செம்ம கலகலப்பாக இருக்கும். ஆனால் ஷாட்டின் போது அட்டகாசமாக நடித்து அசத்தி விடுவார்கள்.  ஜெய் வசனம் இல்லாதபோது தான் மாட்டிக்கொள்வார். என்னை நடித்துக் காட்டச் சொல்வார். நான் கேவலமாக நடிப்பேன். நீங்களே நடித்து விடுங்கள் என்பேன். ஐஸ்வர்யா மேடம் எதுவானாலும் அசத்திவிடுவார். ஆனால் டயலாக்கை அவ்வப்போது மாற்றி விடுவார். ஆனால் அங்கேயே நான் மாற்றிப் பேசுங்கள் என அடம்பிடிப்பேன். மற்றபடி அவர் அட்டகாசமாகச் செய்துவிடுவார். 

 

ஷிவதா மேடம் மிக புரபஷனல். வந்தால் அவர் வேலையை சிறப்பாகச் செய்து விடுவார். வ்ரித்தி குழந்தைகளை நடிக்க வைப்பது தான் கஷ்டம். ஆனால் வ்ரித்தி எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். மிக அட்டகாசமாக நடித்துள்ளார். அம்ஜத் என் எல்லாப் படத்திலும் இருக்கிறார். தன் கேரக்டருக்காக கடுமையாக உழைக்கக் கூடிய நடிகர். மிகச் சிறந்த நண்பர். ரவி எல்லாமும் அவரிடம் சொல்ல முடியும். என்னைவிட இந்தக் கதை மீது நம்பிக்கை கொண்டவர். எடிட்டர் பிரசன்னாவும், நானும் ஒன்றாக படித்தவர்கள். என்னை டென்ஷனே இல்லாமல் பார்த்துக் கொள்வார். டெக்னிக்கல் டீமில் எல்லோருமே மிகக் கடுமையாக உழைத்துள்ளனர்.

 

இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் சித்து, இந்தப் படம் ஆரம்பிக்கும் போது வீட்டில் காதலை ஒத்துக்கொள்ளவில்லை என்றார். அப்புறம் ஒத்துக்கொண்டு கல்யாணம், ஹனிமூன் எல்லாமே இந்தப் படத்திலேயே பார்த்துவிட்டார். இந்தப் படத்தின் காதல், சோகம் அனைத்துக்கும் அழகாக இசை தந்துள்ளார். என் குடும்பத்திற்கு நன்றி. தீராக் காதல் உங்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

 

 

சார்ந்த செய்திகள்