Published on 11/12/2020 | Edited on 11/12/2020
![Kim Ki-duk](http://image.nakkheeran.in/cdn/farfuture/X8BUQzRexWDyQQW2HQ4FBe8NYM_nZeGplRUIhkbFpV4/1607688939/sites/default/files/inline-images/43_17.jpg)
கிம் கி-டுக், பிரபல கொரியன் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர், 'ஃபியட்', '3-அயர்ன்', 'டைம்', 'குரோகோடைல்' ஆகிய படங்கள் மூலம் உலகத் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இந்தியாவில் கேரள மாநிலத்தில் இவருக்கென்று தனி ரசிகர் மன்றம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக, கிம் கி-டுக் இன்று மரணமடைந்துள்ளார். அவருக்குத் தற்போதைய வயது 59 ஆகும். இதனையடுத்து, இச்செய்தியை அறிந்த உலகத் திரைப்பட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.