![bala](http://image.nakkheeran.in/cdn/farfuture/Dz5C6izFCu9t1WzF-ZFIFkY1-d0PxzijVfIWSCuCiwQ/1620627852/sites/default/files/inline-images/151_4.jpg)
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் திமுக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் பாலா முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம். நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில், "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி” என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.