![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/EGCydPovPZI6szQp90kQgGmbUzeDtMwXz2HxvDbvMJA/1632723811/sites/default/files/inline-images/101_11.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 65வது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது டெல்லியில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று (26.09.2021) வெளியிடப்பட்டது. விஜய்யின் 66வது படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், நேற்று வெளியான அறிவிப்பு மூலம் இது உறுதியாகியுள்ளது. அதன்படி, ‘தளபதி 66’ படத்தை வம்சி இயக்க, வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக அறியப்படும் தில் ராஜு, ‘தளபதி 66’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.