![mari selvaraj](http://image.nakkheeran.in/cdn/farfuture/K4rtCoRgGzkNfNJoGl_yramVD_KQDV0nrqyOE7rk9fo/1618232699/sites/default/files/inline-images/18_20.jpg)
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குநர் மாரி செல்வராஜ், 'கர்ணன்' படத்தின் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக த்ருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இப்படத்தில் த்ருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
த்ருவ் தற்போது தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 60' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் அவர் இணையவுள்ளார். 'கர்ணன்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள மாரி செல்வராஜ், அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.