![dhanush fourty three](http://image.nakkheeran.in/cdn/farfuture/mHdNO0Sk9kvm5i70EiEIRua3GpcDg4RVJY519KS-1ak/1604137863/sites/default/files/inline-images/dhanush-kar.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், வடசென்னை, அசுரன், பட்டாஸ் ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது கர்ணன் படத்திலும், அத்ராங்கி ரே என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களை நடிக்கவுள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள படம் அவரின் 43 வது படமாகும். ஏற்கனவே, இப்படத்தை துருவங்கள் பதினாறு, மாபியா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்த நிலையில், அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் படத்தின் பெயர் உள்ளிட்டவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.