![dhanush](http://image.nakkheeran.in/cdn/farfuture/hOh4fCOXh_MrYgNO7VUz5gOrKn6B855xizkCpnouKPQ/1533347660/sites/default/files/inline-images/maari-and-side-kicks.jpg)
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பில் வில்லன் டோவினோ தாமசுடன் தனுஷ் மோதுவதுபோல் ஒரு சண்டைக்காட்சி படமாக்கபட்டபோது யாரும் எதிர்பாராத விதமாக தனுஷின் வலது காலிலும், இடது கையிலும் பலமாக அடிபட்டது. இதையடுத்து உடனே படக்குழுவினர் தனுஷுக்கு முதலுதவி செய்து பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து நடிகர் தனுஷ் காயம் குறித்து பரவலாக செய்திகள் வெளியான நிலையில், தான் நலமுடன் இருப்பதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். அதில்.... "அன்பார்ந்த ரசிகர்களே.. இது பெரிய காயம் எதுவும் இல்லை, நான் நலமுடன் இருக்கிறேன். ரசிகர்களின் அன்பு, வேண்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் தான் என் வலிமையான தூண்கள்" என பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.