Skip to main content

‘தேவ்’ படத்தின் சிங்கள் பாடல் வெளியீடு

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
dev

 

 

 

கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில், இன்று ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசையில் 'அனங்கே' என்று தொடங்கும் முதல் ஆடியோ பாடல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிகப்படியான பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் தாமரை எழுதிய பாடல் வரிகள் இளசுகளை கவரும் வகையில் உள்ளது. ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர். ஆக்ஷன், வீரம், காதல் அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகன், நாயகியாக கார்த்தியும், ரகுல் ப்ரித் சிங்கும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, கார்த்திக் முத்துராமன், நிக்கி கல்ராணி, ரேணுகா, வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ரஜாத் ரவிஷங்கர் எழுதி இயக்க எஸ்.லக்ஷ்மனின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்