Published on 07/12/2018 | Edited on 07/12/2018
![dev](http://image.nakkheeran.in/cdn/farfuture/KAic0KUys0z4C1znbbO-nXqs5X_5XWDtZN32YDaocHk/1544194944/sites/default/files/inline-images/DtuDB8iUcAASDZb.jpg)
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடித்து அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் 'தேவ்' படம் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகி வருகிறது. ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'தேவ்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஹாரிஸ் ஜெயராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தின் பஸ்ட்லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.