ரன்வீர் சிங் நடிக்கும் ‘83’ படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 1983ல் இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகிறது இந்த படம்.
![deepika](http://image.nakkheeran.in/cdn/farfuture/L4kAfYfj5xY-nAcA9D48DLilG6hpu5C2Z5mta2xfzHY/1561111961/sites/default/files/inline-images/deepika-padukone.jpg)
இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க, கபில் தேவின் மனைவியாக நடிக்க ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். முதலில் மிகவும் சிறு வேடம் என்பதால தீபிகா இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் பின்னர் ரன்வீரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தீபிகா இந்த படத்தில் பங்குக்கொள்கிறார் என்பதை ரன்வீர் சிங்கே புகைப்படம் பதிவிட்டு உறுதி செய்தார். இந்நிலையில் ரூ.13 கோடி வரை இந்த படத்தில் நடிக்க தீபிகா சம்பளம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் தீபிகாவும் ரன்வீரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் ஒரு சேர நடிக்க இருக்கும் படம் இதுதான் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு என்று எதிர்பார்க்கிறது படக்குழு.