Published on 10/10/2018 | Edited on 10/10/2018
![danush](http://image.nakkheeran.in/cdn/farfuture/P1TnLvrLKY2rub0YrxnEvRIvmFdIjv_nbxVg_omQyIo/1539191862/sites/default/files/inline-images/DpIA-w9XcAArwEj.jpg)
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 3 பாகமாக உருவாகும் 'வட சென்னை' படம் வரும் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் சமீபத்தில் 'ஏ' சர்டிபிகேட் கொடுத்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது இப்படம் குறித்து நடிகர் தனுஷ் பேசும்போது.... "வட சென்னை' படத்தின் முதல் பாகத்தை முடித்துவிட்டோம். இப்படத்தை தொடர்ந்து எனக்கும் வெற்றிமாறனுக்கும் பிரேக் தேவைப்படுகிறதனால், தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து வேறு ஒரு படம் எடுக்கவுள்ளோம். அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று நாட்களில் ஆரம்பமாகிறது" என்றார்.