Published on 12/05/2020 | Edited on 12/05/2020
![shafique ansari](http://image.nakkheeran.in/cdn/farfuture/WmnInCwuNEaJcHj8nQLt9V9l2WXcBA6jg5bZO2MoaJ4/1589259920/sites/default/files/inline-images/shafique%20ansari.jpg)
’க்ரைம் பேட்ரோல்’ என்ற ஹிந்தி டிவி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஷஃபிக் அன்சாரி. 52 வய்தாகும் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் காரணமாக காலமானார்.
அன்சாரி, கடந்த இரண்டு வருடங்களாக தொராசிக் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்காகவும் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனை ‘சினி டிவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷன்’ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி பதிவிட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக இந்தத் துறையில் பயணத்தைத் தொடங்கிய அன்சாரி, நேரடியாக நடிகராகவில்லை. முதலில் துணை இயக்குனர் மற்றும் திரை எழுத்தாளர் என்று படிப்படியாக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.