கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
![ott](http://image.nakkheeran.in/cdn/farfuture/FTDEomVzYCrtw0mC_ZK7FuiaSehHGuaorswa2TQPwHk/1585197332/sites/default/files/inline-images/ott%20platforms.jpg)
இந்தியாவிலும் கரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நேற்று இரவு 12 மணியிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவையேஎ கடைபிடிக்கின்றது.
மக்கள் அனைவரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசாங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதை மீறி தேவையின்றி வெளியே வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணியாளர்கள் பலரும் வீட்டிலிருந்த படியே பணிகளை தொடர்கின்றனர் அல்லது வீட்டில் விடுமுறையை கழிக்கின்றனர். இதனால் ஓடிடி பிளாட்ஃபார்ம் பயன்படுத்துவோரின் வளர்ச்சி இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் பல நிறுவனங்கள் பலவகை ஆஃபர்கள் அறிவிக்கையில், அமேசான் ப்ரைம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், “அதில், "அமேசான் ப்ரைமில் நீங்கள் தொடர்ந்து படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் நேரத்தில், நாட்டில் உள்ள அனைவருக்கும் மொபைல் போனில் இன்டர்நெட் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். சில தவிர்க்கமுடியாத சூழல்களால் நெட்வொர்க் தடையைக் குறைக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை செல்போன்களில் எஸ்டி (சாதாரண குவாலிட்டி)யில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறோம்.
எச்டியோ அல்லது எஸ்டியோ நாங்கள் உங்களைத் தொடர்ந்து மகிழ்விப்போம். தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும்" என்று குறிப்பிட்டுள்ளது அமேசான் நிறுவனம்.