![Complaint against actor Redin Kingsley](http://image.nakkheeran.in/cdn/farfuture/kIIApwaFs5hDxMH4CmEGgWleQ_fuomEgw26zXVmuDSI/1676101632/sites/default/files/inline-images/112_36.jpg)
'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி, 'டாக்டர்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் 'லெக்பீஸ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தற்போது நடிக்க மறுத்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக 'லெக்பீஸ்’ பட தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரில், 'லெக்பீஸ் படத்தில் 10 நாட்கள் நடிக்க ரெடின் கிங்ஸ்லிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 4 நாட்கள் மட்டுமே நடித்துவிட்டு, மீதி நாட்களில் நடிக்க மறுத்து வருகிறார். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால், அந்த நஷ்டத்தை அவர் திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர் நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக ரெடின் கிங்ஸ்லி விளக்கம் தர வேண்டி தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.