Published on 12/09/2020 | Edited on 12/09/2020
![hrhds](http://image.nakkheeran.in/cdn/farfuture/XLws03hB4XRKWrQNHhssXsgMkeUntyD82fDhc1osUvA/1599895488/sites/default/files/inline-images/maxresdefault_135.jpg)
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனது நகைச்சுவையால் கலங்கடித்த நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர், இயக்குனர் சேரன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்...
"வடிவேலு .. திரு நாகேஷ் அவர்களுக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த ஒரு காமெடி நடிகர்... இன்று உலகம் முழுதும் மீம்ஸ் மூலமும் கொடிகட்டி பறக்கும் வடிவேலு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இடம் அப்படியே இருக்கிறது பங்காளி.. வாங்க மீண்டும் நடிக்க.." என கூறியுள்ளார்.