Skip to main content

தமிழ் படத்தின் கதையை திருடி தெலுங்கு திரைப்படம்... உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

chennai high court new order sathuranga vettai 2 movie story theft case

 

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான 'சதுரங்க வேட்டை' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் எச் வினோத் எழுத்தில் நிர்மல் குமார் நடிகர் அரவிந்த் சாமியை வைத்து 'சதுரங்க வேட்டை 2' படத்தை இயக்கியுள்ளார். 

 

இதனிடையே சதுரங்க வேட்டை 2 படத்தின் கதையை திருடி தெலுங்கில் 'கிலாடி' படத்தை இயக்கியுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கங்காதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில்,"'சதுரங்க வேட்டை 2' திரைப்படத்தை தமிழில் வெளியிட காப்புரிமை பெற்றுள்ளேன். அந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை ஹைதராபாத்தில் உள்ள கிரண் ஸ்டூடியோ நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் வர்மாவுடன் 40 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தேன். இந்நிலையில் சதுரங்க வேட்டை 2 கதையை மையமாக வைத்து ரவி தேஜா நடிப்பில் 'கிலாடி' என்ற படத்தை, ஒப்பந்தத்துக்கு விரோதமாக தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கதை திடுட்டில் ஈடுபட்ட கிரண் ஸ்டூடியோ நிறுவனம் 'கிலாடி' திரைப்படத்தை ஓடிடி மற்றும் பிற தளங்களில் வெளியிடுவதற்கும், விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இவ்வழக்கின் விசாரணையில் நீதிபதி நிர்மல்குமார் இந்த வழக்கு குறித்து கிரண் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்