![Celebrity joins Vishal for the 12th time](http://image.nakkheeran.in/cdn/farfuture/QR8elzLjV9QfojjzjajG6mzzDt8Br2lBPENeGsVyHOQ/1649066612/sites/default/files/inline-images/o_2.jpg)
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராணா ப்ரொடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தை வினோத் குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டு யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள விஷால், "எனது சினிமா வாழ்க்கையில் 12வது முறையாக மீண்டும் கூட்டணி அமைத்தது மகிழ்ச்சி. எனது நண்பர் மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவை 'லத்தி' படக்குழு சார்பாக வரவேற்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் 'துப்பறிவாளன் 2', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இதில் துப்பறிவாளன் 2 படத்தில் நடிப்பது மட்டுமின்றி இயக்கவும் உள்ளார்.