Skip to main content

பிரபல நடிகை சடலமாகக் கண்டெடுப்பு!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

Arya Banerjee

 

பிரபல பாலிவுட் நடிகையான ஆர்யா பானர்ஜி, 'டர்ட்டி பிக்சர்ஸ்', 'எல்.எஸ்.டி' ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆவார். 33 வயதே நிரம்பிய அவர், கொல்கத்தாவில் அமைந்துள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

 

இன்று காலை அவரது உதவியாளர் வந்து கதவைத் தட்டும் போது, நீண்ட நேரமாகக் கதவு திறக்கப்படவில்லை. ஃபோன் மூலம் தொடர்புகொள்ள முயன்றும் முடியாததையடுத்து சந்தேகமடைந்த அவர், அருகில் உள்ள வீட்டிற்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆர்யா பானர்ஜி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பின், அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

 

முதற்கட்ட விசாரணையானது தற்போது நடைபெற்று வருவதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், பாலிவுட் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்