Skip to main content

பிக்பாஸ் டீமில் சம்பள பிரச்சனை !

Published on 20/06/2018 | Edited on 20/06/2018
kamal

 

 

 

சென்ற ஆண்டை போல இந்த ஆண்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த 17ஆம் தேதி ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர்கள், மற்றும் கலைத்துறை சேர்ந்தவர்கள் பங்குபெற்றுள்ளனர். மேலும் இந்த ஆண்டும் நடிகர் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பூந்தமல்லியை அடுத்து இவிபி பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருக்கும் இதன் படப்பிடிப்பில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பள பிரச்சனை உள்ளதாக பிக்பாஸ் குழுவினர் சொல்வது போல் தற்போது ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்..."கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஷண்முகம் அவர்கள் பிக்பாசில் வேலை செய்யும் உதவி கலை இயக்குனர்களுக்கு சென்ற ஆண்டை போல இந்த ஆண்டிலும் இரு நபர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2500 வீதம் சம்பளம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால் நாங்கள் ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.1100 வீதம் தான் தருவோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டோம். அனால் அவர் தீடிரென்று இப்போது மாற்றி பழைய சம்பளத்தையே கேட்கிறார். 

 

 

 

மேலும் இன்னும் இரண்டு பேர் வரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் படியும் கட்டாயப்படுத்துகிறார். பிறகு பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி அவர்கள் பிக்பாசில் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதாவர்கள் எத்தனை பேர் வேலைபார்க்கிறார்கள் என்று கேட்கிறார். அதற்கு நாங்கள் இங்கு யாரும் உறுப்பினர் அல்லாதவர்கள் வேலைபார்க்கவில்லை என்றும், ஏற்கனவே எங்கள் சின்ன திரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து உங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வேலை செய்பவர்களின் பட்டியலை அனுப்பிவிட்டோம் அதில் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னோம். மேலும் அப்படி உறுப்பினர் அல்லாது யாரேனும் பிக்பாசில் வேலை செய்தால் நீங்களே சொல்லுங்கள் அதற்கு தகுந்த முடிவை நாங்கள் எடுக்கிறோம் என்று சொன்னோம். அதற்கு செல்வமணி அவர்கள் எங்களுக்கு நேராக பட்டியலை அனுப்ப சொல்லி கட்டாயப்படுத்துகிறார். எதுவாக இருந்தாலும் எங்கள் சின்ன திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தான் எங்களால் அணுக முடியும் என்றும், நேரடியாக பட்டியலை அனுப்பக்கூடிய அதிகாரம் எங்களிடம் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்து விட்டோம். ஆனால் செல்வமணி அவர்கள் நீங்கள் அனுப்பவில்லை என்றால் இந்த பிரச்சனையை வேறு வழியில் பார்த்துக்கொளவதாக எங்களை மிரட்டுகிறார். இருந்தும் நாங்கள் என்னவென்பதை தெளிவாக சொல்லிவிட்டோம் அதன் பிறகு என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்" என்று அந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்