'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படத்தையடுத்து பாடலாசிரியர் யுரேகா தற்போது இயக்கியுள்ள படம் 'காட்டுப்பய சார் இந்த காளி'. இப்படத்தில் ஜெய்வந்த், ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, அபிஷேக், புதுமுகம் ஐரா உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்துகொண்டு பேசுகையில்..."பொதுவாக படத்தின் தலைப்பு வைப்பதில் எனக்கு உடன் பாடில்லை. குறிப்பாக இந்த படத்தின் தலைப்பு ‘கெட்டப்பய சார் இந்த காளி’ என்று வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் தலைப்பு வைத்து நடிகர்களை நாம் தூக்கி விடுகிறோம். அப்படி பண்ணு, இப்படி பண்ணு என்று சொல்லி விடுகிறோம். நாம் எழுதி கொடுத்த வசனத்தை படித்து, பாடல்களை பாடி, நாளை நாட்டை ஆளுகிறேன் என்று வந்து நிக்கிறான். அவர்களை எல்லாம் அப்போவே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ரசிகர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள். அவன் வெவரங்கெட்டவன், கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என அவர்களையும் அப்போதே தடுத்திருக்க வேண்டும். அவர்களை தடுக்காததால் ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை ஆளப்போவதாக சொல்லி வருகிறான். எல்லாம் நாம் செய்த தவறுதான்" என்று நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடியுள்ளார்.