Published on 02/06/2021 | Edited on 02/06/2021
![fsfsdd](http://image.nakkheeran.in/cdn/farfuture/3Zxvz3NsYE1vHdnu1nDZEpVc93AVNLXUY8D_lA3QsMs/1622620873/sites/default/files/inline-images/E2165MQVcAkqFsw.jpg)
இசைஞானி இளையராஜா இன்று (02.06.2021) தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரது நண்பர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...
"உனக்கும்,
உன் இசைக்கும்,
நம் உறவுக்கும்,
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள்டா.
உயிர்த் தோழன்
பாரதிராஜா" என பதிவிட்டுள்ளார்.