![barathiraja](http://image.nakkheeran.in/cdn/farfuture/44zba_PPhSijr8pMWHV-aX0rL8qx8tDGEneVzWa3oKo/1589970439/sites/default/files/inline-images/barathiraja%20%20%281%29.jpg)
மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பாலுமகேந்திராவின் சிறப்பு குறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு முறை நமக்கு அளித்த பேட்டியில் பாலுமகேந்திரா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். அதிலிருந்து...
“இது கேட்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. அவர்களை பின்னோக்கி பார்க்கும்போது, நான் உணர்ச்சி வசப்படுகிறேன். அவர்களெல்லாம் போய்விட்டார்கள் என்று யோசிக்கும்போது கஷ்டமாக இருக்கும். அடுத்தது நானாக இருப்பேன் என்று தோன்றும்.
பாலுமகேந்திரா என்னுடைய நண்பன் ‘பாலு’ என்று நான் அழைப்பேன், அவர் என்னை ‘பாரதி’ என்று அழைப்பார். என்னை தமிழ் சினிமா துறையில் பாரதி என்று அழைப்பவர்கள்... பாலச்சந்தர், பாலுமகேந்திரா, செல்வராஜ் என்ற எழுத்தாளர் இவர்கள்தான். மற்றவர்களெல்லாம் இயக்குனர் சார் என்பார்கள் இல்லையென்றால் அப்பா என்று அழைப்பார்கள்"