Skip to main content

'படம் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை' - கே.பாக்யராஜ் பேச்சு 

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
mr.chandramouli

 

bagiyaraj

 

 

 

ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்  ஜனனி கே. பாலு மற்றும் வீடு புரொடக்ஷன்ஸ் தினேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் 'வெடிகுண்டு பசங்க' படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி  நடித்திருக்கிறார்கள்.  'டோரா', 'குலேபகாவலி' ஆகிய படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது விழாவில் நடிகர் நாசர் பேசியபோது...."முழுக்க முழுக்க தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே, இந்திய எல்லைக்குள்ளேயே எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் எல்லாம், உலகம் முழுக்க பல மூலைகளில் திரையிடப்படும் போது, ஏன் அங்கே உருவாகிற படங்களை தமிழகத்தில் வெளியிடக் கூடாது....என்கிற கேள்வி எனக்குள் இருந்து வந்தது. பல முறை நான் சிங்கப்பூர், மலேசியா செல்லும் போதெல்லாம் அங்கிருக்கிற தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் விவாதிப்பேன். அதற்கெல்லாம் விடையாக இந்த 'வெடிகுண்டு பசங்க' வந்திருக்கிறது" என்றார்.

 

bagiyaraj

 

 

 

பின்னர் நாசரை தொடர்ந்து இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியபோது... "கதாநாயகன் தினேஷ் குமார் எனக்கு வராத ஒன்றை மிகவும் நன்றாக செய்திருக்கிறார், அது தான் நடனமாடுவது. இசையமைப்பாளர் விவேக் மெர்வினின் பாடல்களே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. முன்னதாக நாசர் சொன்னது போல, மலேசியாவில் உள்ள வாழ்வியலை ஒட்டியே படமாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அது கலைப்படமாக அமைந்து விடக் கூடாது. பொழுதுபோக்கிற்கான அம்சங்களுடன் இருக்கும் போது நிச்சயம் ரசிகர்கள் விரும்புவார்கள். இங்கு தலைப்பு பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசினார்கள். முறையாக பதிவு செய்யப்பட்ட தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போட வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் தலைப்பு விஷயத்தில் நடக்கிற கமிஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம். இப்போதிருக்கும் சினிமா சூழலில் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை. திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றைத் தாண்டியும், படம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பாகவே இருக்கிறது. எனவே இந்த 'வெடிகுண்டு பசங்க' வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்