![Aval peyar Rajni First look](http://image.nakkheeran.in/cdn/farfuture/FMlsxWyFUC3nMxGdIpciYScXbApsAgUiim8qICTGl44/1680865742/sites/default/files/inline-images/First%20look.jpg)
காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பரபரப்பான இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படம் “அவள் பெயர் ரஜ்னி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.
விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் இதுவாகும். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க நமிதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.