Skip to main content

'கெட்டது தெரிஞ்ச நல்லவனா இரு...' - கவனம் ஈர்க்கும் ஜெய், சுந்தர்.சி பட டீசர்

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

Attractive Jay, Sundar.C's pattampoochi movie Teaser

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் ஜெய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'வீரபாண்டியபுரம்' மற்றும் 'குற்றம் குற்றமே' படம் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. அடுத்து இவர் 'பட்டாம்பூச்சி' படத்தில் நடித்து முடித்துள்ளார். புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகை ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'அவ்னி டெலி மீடியா' சார்பாக குஷ்பூ தயாரிக்கும் இப்படத்தை பத்ரி நாராயணன் இயக்கியுள்ளார். நவநீத் சுந்தர் என்பவர் இசையமைத்துள்ளார்.     

 

இந்நிலையில்  'பட்டாம்பூச்சி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி நடித்துள்ளார். சைக்கோ கொலைகாரனாக ஜெய் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசர் யூடியூபில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்