![arun vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/aDKxSFpk4pfK_U2jTmLOdOe4cwqn_n5TIzWsxC--SYg/1618745496/sites/default/files/inline-images/119_4.jpg)
நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விவேக்கின் மரணச் செய்தி வெளியானதிலிருந்தே, அவரது ஆசையான ஒரு கோடி மரங்களை நடவேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கோடு ரசிகர்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பலரும் மரம் நடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவ்வாறு மரம் நடும் புகைப்படங்களை சமூக வலைதலைப்பக்கங்களில் பகிர்ந்து, பிறரையும் மரம் நட வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் அருண் விஜய்யின் ரசிகர் மன்றம் சார்பாக ரசிகர்கள் மரம் நட்டு வருகின்றனர். அந்தப் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அருண் விஜய், "என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி. இது தொடரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி!!🙏
— ArunVijay (@arunvijayno1) April 18, 2021
இது தொடரட்டும்... pic.twitter.com/1pLN1NQHzy