Skip to main content

முதல் நாளே கீறல்; சானிடைசர் போட்டு கழுவிய மகன் - அனுபவம் பகிரும் தந்தை

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

arun vijay talk about oh my dog film

 

2டி நிறுவனத்தின் சார்பில் சூர்யா ஜோதிகா இருவரும் ஓ மை டாக் என்ற படத்தை தயாரித்துள்ளனர். சரோவ் சண்முகம் இயக்கியுள்ள இப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜயகுமார், அருண் விஜய், வினய், மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 21ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் அருண் விஜய் படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், "செல்ல பிராணியான சிம்பா முதல் நாளே ஆர்ணவ்வை கீறி விட்டது. ஆனால் அவர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு படப்பிடிப்பை தொடர்ந்தார். அது ஆர்ணவ்வின் உலகம். சிம்பா நன்கு வளர்ந்தவர். இரண்டு மூன்று குட்டிகளுடன் வளர்ந்து கொண்டிருந்ததால் எங்களிடம் வந்தன. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது வெவ்வேறு குட்டிகள் வளர்ந்து வருவதால், அவற்றினோடும் படப்பிடிப்பில் நடிக்க வேண்டியிருந்தது. நாய்க்குட்டிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். அவற்றில் சில நாய்க்குட்டி ஆர்ணவ்வை கடிக்கத் தொடங்கியது. அவை சிறிய குட்டிகள் என்பதால் அவை கடிக்கின்றனவா? இல்லையா? என்பது கூட தெரியாது. சில குட்டிகள் கூர்மையான பற்களால் கடிக்கத் தொடங்கியது. ஆனால் அதனை ஆர்ணவ் சரியாக எதிர்கொண்டார். கைகளில் ஏற்படும் கீறல்களால் எந்த பிரச்சனையும் இல்லை. அது சிறிய காயம் என்று அவர் கூறினார். பிறகு அவரை கைகளை சானிடைசரை கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டு நடித்தார். ஏனெனில் அவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த விஷயம் அந்த தருணத்தில் அவனுக்கு உதவியது. படத்தில் ஆர்ணவ்வுடன் நாய்க்கும் இருக்கும் தொடர்பு உண்மையாக இருந்தது. அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும் விரும்பினார்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்