Skip to main content

‘அரண்மனை’ பட ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி...

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

கடந்த வாரம் வெளியான காஞ்சனா-3 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் பேய் பட தொடங்க இருக்கிறது. இதில் இயக்குனர் சுந்தர்.சி இணைந்துள்ளார். விஷாலை வைத்து தற்போது இயக்கி வரும் படம் முடிந்தவுடன், அரண்மனை 3 படத்தை எடுக்க இருக்கிறாராம்.
 

aranmanai


விஷால் படத்தின் பணிகளுக்கு இடையே, 'அரண்மனை 3' படத்துக்கான கதை விவாதத்தை கவனித்து வருகிறார். விரைவில் இப்பணிகள் முடிவுபெற்றாலும், விஷால் படத்தின் பணிகளை முடித்தவுடன் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
 

சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றவையாகும். ஆகையால், 'அரண்மனை 3' படத்தை தனது சொந்த நிறுவனமான அவ்னி சினி மேக்ஸ் மூலமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
 

devarattam

 

 

சார்ந்த செய்திகள்