![arya](http://image.nakkheeran.in/cdn/farfuture/fD_2-ctEuxOniWLqn6YKe6f15KnEUMvhITHCDFWHHB8/1630327289/sites/default/files/inline-images/48_16.jpg)
சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.