தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கும் 'பிசாசு 2', கா ஆகிய படங்களில் படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா அடுத்ததாக அழகு கார்த்தி இயக்கும் 'நோ எண்ட்ரி' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெய ஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அஸீஸ் இசையமைக்க, ஸ்ரீதர் தயாரிக்கிறார்.
சுற்றுலாவுக்கு மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய் கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும். அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிகிறது, என்பதை பரபர திரைக்கதையில் திரில் பயணமாக சொல்லும் படம் தான் “நோ எண்ட்ரி”. இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.