Skip to main content

காட்டை கலங்கவைக்கும் 'கா'.... புதிய பரிமாணத்தில் ஆண்ட்ரியா

Published on 30/04/2018 | Edited on 02/05/2018

Andrea


அவள் படத்தை அடுத்து நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம்  'கா'. முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார். கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதால் இதற்கு 'கா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும்  நீண்ட இடைவெளிக்கு பிறகு 'வேதநாயகம்' புகழ் சலீம் கவுஸ்  நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

சார்ந்த செய்திகள்