![amitab bachan](http://image.nakkheeran.in/cdn/farfuture/nT_bz-jGPSwkOEUoszPmnTq4d-q1n4V701umd0n2LWE/1596368886/sites/default/files/inline-images/amitab-bachan-1_1.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் மும்பை மாநகரில் தினந்தோறும் பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி உள்ளிட்டோர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தற்போது அமிதாப் பச்சன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது மகன் அபிஷேக் பச்சன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு திரும்பியுள்ள அமிதாப்புக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.