Skip to main content

'அமலா பால் சிறப்பாக நடித்துள்ளார்' - நெகிழ்ந்த தயாரிப்பாளர் 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
ratchasan

 

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்துள்ள படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் காளி வெங்கட், முனீஷ்காந்த் ராமதாஸ், சுசானே ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் டி.ராம் இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு பேசும்போது... "ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போழுதும் நடிகர்களை தேர்வு செய்வதற்கு முன்னரே, வலுவான கதைகளை தேர்வு செய்து வருகிறது. அதே வகையில் தான் 'ராட்சசன்' படத்தையும் தேர்வு செய்தோம். நான் ஒரு தீவிர கிரைம் நாவல் வாசகர் என்பதால், இயக்குனர் ராம்குமார் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

 

 

 

அவர் சொன்னதை விட, படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார். மேலும் படக்குழுவை பற்றி பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. நாயகன் விஷ்ணு விஷால் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்ய, நிறைய உழைத்தார். ஆராய்ச்சி செய்தார். தனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க, அவரது தந்தையிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அமலா பால் இதுவரை நடித்த படங்களை தாண்டி, அவரது சிறந்த படமாக இந்த படம் இருக்கும். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் இணையற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜிப்ரான் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. அவருக்கு ஒலி மற்றும் ஒலியை இசையுடன் கலப்பதில் நல்ல அறிவாற்றல் இருப்பதால் அது திரைப்படத்திற்கு மேலும் உயிர் சேர்க்கிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்