![allu arjun daugter welcom him after 15day dubai trip](http://image.nakkheeran.in/cdn/farfuture/GOZKWCPy50p10Mnz9V8H61pAqr4hsu3Bwt_IGG7PZ_k/1643453171/sites/default/files/inline-images/aarkka.jpg)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு வட இந்திய ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் துபாய் சென்றுவிட்டு 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை வரவேற்கும் வகையில் அல்லு அர்ஜுனின் மகள் ஆர்கா வீட்டுத் தரையில் பூக்கள் மற்றும் இலைகளால் 'வெல்கம் நானா' என எழுதி வரவேற்று இருந்தார். இதனைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த அல்லு அர்ஜுன் மகளின் செயலை புகைப்படம் எடுத்து "16 நாட்கள் கழித்து இனிமையான வரவேற்பு" தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.