![alia bhatt replace sai pallavi in ranbir kapoor ramayana movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/cyXBLzB_WBPUVcvOD8MqsHsAX2RFVLaYGA7mrR0QANo/1686226769/sites/default/files/inline-images/461_7.jpg)
ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் முன்னரே வெளிவந்துள்ள நிலையில் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் பிரபாஸ், க்ரீத்தி சனோன், சையிப் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் கே.ஜி.எஃப் புகழ் யஷ் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில் சாய் பல்லவிக்கு பதிலாக ஆலியா பட் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளதாகவும் இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.