Published on 21/09/2018 | Edited on 21/09/2018
பா.இரஞ்சித் இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான 'காலா' படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த சாக்ஷி அகர்வால் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் 'விஸ்வாசம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் ரசிகையான இவர் தற்போது அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில்... "அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மேன்மை கொண்ட, உத்வேகம் தரக்கூடிய ஒரு சிறந்த மனிதர். அவரை சந்தித்தது ஆசிர்வாதமாக என் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருப்பேன். பெரிய ரசிகையாக உணர்ந்த தருணம் இது" என்று மகிழ்ச்சி போங்க பதிவிட்டுள்ளார்.