Skip to main content

300 கிராமிய கலைஞர்களுடன் அஜித்...  

Published on 25/07/2018 | Edited on 26/07/2018
ajith

 

 

 

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். 'வீரம்' படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மீண்டும் கிராமத்து கதையில் நடித்து வருகிறார். பொதுவாக இமான் இசையமைக்கும் கிராமத்து படங்களுக்கு எப்போதுமே கிராமிய கலைஞர்களை பாட வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் இப்படத்திலும் ஒரு கிராமிய கரகாட்ட பாடல் இடம்பெறுகிறது. அதற்கும் கிராமிய கலைஞர்களை பாடவைத்துள்ளார். மேலும் அஜித்துடன் இணைந்து தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் இப்பாடல் காட்சியில் பங்கேற்று உள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்