Published on 22/11/2018 | Edited on 22/11/2018
சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்ப்படம் 2' மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா மேனன் அடுத்ததாக விமலுடன் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இதுகுறித்து ஐஸ்வர்யா மேனன் விளக்கமளித்து பேசியபோது... "அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறேன். ஆனால் இது தமிழ்ப்படம் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்திற்கு நேர் எதிரான சீரியஸ் வேடமாக இருக்கும். கொலையை துப்பறியும் திரில்லர் வகை கதை அது. அடுத்து விமலுடன் நடிப்பதாக வரும் செய்தியில் உண்மை இல்லை. அப்படி யாரும் என்னை அணுகவில்லை. தெலுங்கிலும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. பொறுமையாக பரிசீலித்து நடித்து வருகிறேன்" என்றார்.