![after 20 years Rekha is playing the lead role in miriam maa](http://image.nakkheeran.in/cdn/farfuture/fnN-aMXs2fGU0CYyqZdfnrDYC1BRIiwx2UqSSvlAcjU/1685530747/sites/default/files/inline-images/34_76.jpg)
'கடலோர கவிதைகள்' புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மிரியம்மா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகியாக, நடிக்கிறார்.