Skip to main content

‘ஏலே’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது புதிய தகவல்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

aelay

 

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏலே'. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த்துடன் இணைந்து இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர். படம் காதலர் தினத்தையொட்டி வெளியாக இருந்த நிலையில், ஓடிடி வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளருக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழ, படம் நேரடியாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டது.

 

ad

 

இந்த நிலையில், ‘ஏலே’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 5-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ‘ஏலே’ திரைப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்