Published on 11/01/2025 | Edited on 11/01/2025
1970 மற்றும் 1980களில் நிறைய தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் கமலா. பெரும்பாலும் விசுவின் படங்களில் அதிகம் இடம் பெறுவார். இவர் இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கமலா காமேஷ் என அழைக்கப்பட்டு வந்தார்.
மொத்தம் 480 படங்களில் நடித்த கமலா காமேஷ், சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடைசியாக ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கமலா காமேஷ், சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.