சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ள, இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 7ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
![vivek](http://image.nakkheeran.in/cdn/farfuture/qEuYJiHde0GSzPSs_7DUH7BalsiqUuSnEaACq7fQZqo/1575892842/sites/default/files/inline-images/vivek_16.jpg)
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக், “உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்தான். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனே தமிழகத்தின் ஸ்டார் ரஜினி சார்தான் சொன்னார். தலைவர் சிவனோடு ஒரு சிட்டிங், எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ என நினைக்க தோணுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அடிப்பட்டவர்களை மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்த்தபோது அடிப்பட்டவர் யார் நீங்க? என்று கேட்டபோது நமக்குள் எவ்வளவு கோபம் வந்தது. ஆனால், அவர், ‘நான்தான் பா ரஜினிகாந்த்’ அப்படினு சொன்னார் அதான் சூப்பர் ஸ்டார்” என்று கூறினார்.