![actor Vikram wraps up shoot Cobra film](http://image.nakkheeran.in/cdn/farfuture/oMmDI3QgYAXHfxMDTRvJyGxZXoLJpx6x0DzJE4ej_xg/1641445060/sites/default/files/inline-images/cobra_2.jpg)
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான 'கோப்ரா' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விக்ரம் 'கோப்ரா' படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரமின் கடைசி நாளை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.