![actor silambarasan joining to director ram next movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/FO2f7hJ4vmCrHEffjSfLCXffhwmiq7OZhMoz6hktl6Y/1638592990/sites/default/files/inline-images/ram_20.jpg)
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு 'மாநாடு' படத்தில் நடித்திருந்தார். கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/fexqvR75M4MZ8DcBT088HwOKITpDKgjsXSMsz4rKFlo/1638593007/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_47.jpg)
இந்நிலையில், நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் ராம் கடைசியாக இயக்கிய 'பேரன்பு' திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்று, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராம் தற்போது நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் பணிகளை நிறைவுசெய்த பிறகு சிம்பு படத்தில் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'தங்க மீன்கள்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.