![Actor Rajinikanth congratulates the crew of Chandramukhi - 2](http://image.nakkheeran.in/cdn/farfuture/oeImy7FrGO2lWDpiq3gf5Mjfb4QNFHBUwxuFgY_Cbk0/1696003809/sites/default/files/inline-images/rajini-kanth-smile.jpg)
சந்திரமுகி - 2 படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ராணாவத், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சந்திரமுகி - 2. நேற்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரைப் பாராட்டி வெளியிட்டுள்ள கடிதத்தில், “மிகப்பெரிய வெற்றிப் படமான தன்னுடைய சந்திரமுகியை, புதிதாக, வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக, சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் வாசுவுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்தில் ராகவா லாரன்ஸ் படம் வெளியாவதற்கு முன்தினம் நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.