Published on 26/03/2021 | Edited on 26/03/2021
![karthi](http://image.nakkheeran.in/cdn/farfuture/EH67uDdNOnQbDzfwSkKnvqyHXgLzRbk3_l65h8iEaAE/1616742275/sites/default/files/inline-images/96_8.jpg)
வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'தோழா'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், ‘தோழா’ படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை நினைவுகூரும் விதமாக இயக்குநர் வம்சி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டிருந்தார்.
அப்பதிவைப் பகிர்ந்த கார்த்தி, இயக்குநர் வம்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தப் படமும், படத்தின் மூலம் எனக்கு கிடைத்த உறவுகளும் என் மனதுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு முறை ‘தோழா’ படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போதும் இன்றுவரை எனக்குப் பாராட்டுகள் கிடைக்கின்றன. எனக்கு சீனு கதாபாத்திரம் கொடுத்தமைக்கு நன்றி வம்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.